ஜனாதிபதியின் முன் உறுதிமொழி எடுத்த மாணவர்கள்!

ஜனாதிபதியின் முன் உறுதிமொழி எடுத்த மாணவர்கள்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரம் ஜனவரி 21 முதல் 28 வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் இன்று இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் போதையில் இருந்து விடுபட்ட நாடு மற்றும் போதைப்பொருள் தடுப்பு தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பாடசாலை மாணவர்கள் உட்பட அனைவரும் போதைப்பொருளுக்கு எதிராக உறுதிமொழியினை எடுத்துள்ளனர்.

நிகழ்வில் வடமாகண ஆளுநர் சுரேஷ் ராகவன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இராணுவ தலைமை அதிகாரிகள், பொலிஸ்மா அதிபர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.