கிளிநொச்சியில் மைத்திரி மரம் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

கிளிநொச்சியில் மைத்திரி மரம் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

இன்று முல்லைத்தீவு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கிளிநொச்சியில் மரம் நாட்டும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.

இன்று பகல் 1 மணியளவில் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற மர நடுகை நிழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டு மரக்கன்றொன்றையும் நாட்டி வைத்தார். (குறித்த நிகழ்வு இலங்கை ரூபவாகினி கூட்டுதாபனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது)

ஜனாதிபதியுடன் அமைச்சர்கள், பா ம உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது 1500 மரக்கன்றுகள் இன்று குறித்த வளாகத்தில் நாட்டி வைக்கப்பட்டது, பல்கலைக்கழக மாணவர்கள், அமைச்சர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதி மக்கள் மற்றம் மாணவர்களுடன் நெருக்கமாக பழகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பாடசாலை மாணவர்களிடம் அவர்களின் பாடசாலைகளில் உள்ள தேவைகளையும் ஜனாதிபதி கேட்டறிந்து கொண்டார்.