புலிகள் தொடர்பான இரகசிய ஆவணங்களை பிரித்தானியா அழித்துள்ளது!

புலிகள் தொடர்பான இரகசிய ஆவணங்களை பிரித்தானியா அழித்துள்ளது!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இரகசிய ஆவணங்களை பிரித்தானிய அரசாங்கம் அழித்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புலிகள் குறித்த 372 இரகசிய ஆவணங்கள் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவிலிருந்து பிரசூரமாகும் மோர்னிங் ஸ்டார் என்னும் பத்திரிகை முதல் தடவையாக இந்த தகவல்களை வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

எம்.ஐ 15 புலனாய்வுப் பிரிவு புலிகள் பற்றி வழங்கிய இரகசிய ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புலிகளின் ஆவணங்கள் அழிக்கப்பட்டமைக்கு புலம்பெயர் அமைப்புக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெற்கு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.