வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள படைப்புளுவின் தாக்கம் தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு.

வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள படைப்புளுவின் தாக்கம் தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு.

கிளிநொச்சி முல்லைத்தீவு உள்ளிட்ட வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள படைப்புளுவின் தாக்கம் மற்றும் அதனை எதிர்கொள்ளும் முறை தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

குறித்த ஊடக சந்திப்பு இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி இரணைமடு சந்தியில் அமைந்துள்ள விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் இடம்பெற்றது.

குறித்த ஊடக சந்திப்பில் தற்போது ஏற்பட்டுள்ள படைப்புளுவின் பாதிப்புக்கள் தொடர்பில்விவசாய ஆராய்ச்சி நிலைய வட பிராந்திய மேலதிக பணிப்பாளர் சின்னத்துரை ஜேம்சன் அரசகேசரி மற்றும் வடமாகாண விவசாய ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் உதவி பணிப்பாளர் சிறின்பரமலிங்கம் ராஜேஸ் கண்ணா ஆகியோர் விளக்கமளித்தனர்.

இதன்போது குறித்த பூச்சி தாக்கம், அதனை கட்டுப்படுத்தும் முறை தொடர்பில் ஊடகங்களின் ஊடாக தெளிவு படுத்தப்பட்டது.