மாநில கட்சிகளே மத்தியில் ஆட்சியை தீர்மானிக்கும்!

மாநில கட்சிகளே மத்தியில் ஆட்சியை தீர்மானிக்கும்!

மாநில கட்சிகளே மத்தியில் ஆட்சியை தீர்மானிக்குமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே சீமான் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறியுள்ளதாவது,

“நடைபெறவுள்ள தேர்தலில் பா.ஜ.க மீண்டும் ஆட்சியமைக்குமென கருத்துருவாக்கம் மக்கள் மனதில் விதைக்கப்பட்டு வருகின்றது.

இதனால் வெற்றிபெறுவதாக கூறுகின்ற கட்சிக்கு வாக்களிப்போமென்ற எண்ணம் மக்களிடத்தில் தோற்றும் பெறுகின்றது.

ஆனால், தேர்தல் நிறைவுபெற்ற பின்னரே வெற்றியாளர் யாரென்பதை தீர்மானிக்க வேண்டும்.

அந்தவகையில் நடைபெறவுள்ள தேர்தலில் மாநில கட்சிகளே மத்தியில் ஆட்சியை தீர்மானிக்கும்” என சீமான் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.