வடக்கு- கிழக்கு மக்களுக்கு இவ்வாண்டுக்குள் 17 ஆயிரம் வீடுகள்!

வடக்கு- கிழக்கு மக்களுக்கு இவ்வாண்டுக்குள் 17 ஆயிரம் வீடுகள்!

வடக்கு- கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2019ஆம் ஆண்டின் இறுதிக்குள் 17 ஆயிரம் வீடுகளை ஒப்படைக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அவரது செயலாளர் மற்றும் ஆலோசகர் ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இச்சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, வடக்கு- கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான பேச்சுவார்த்தை மிக நீண்ட காலமாக தொடர்ந்து வருகின்ற போதிலும், இதுவரை அது சாத்தியப்படாமை குறித்து கூட்டமைப்பு பிரதமர் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.

இப்பேச்சுவார்த்தைக்கு அமைய 17 ஆயிரம் வீடுகளை இவ்வாண்டுக்குள் மக்களிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.