ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க புத்தசாசன அமைச்சு பரிந்துரை

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க புத்தசாசன அமைச்சு பரிந்துரை

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு புத்த சாசன அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளார்.

இதில், மகாநாயக்க தேரர்கள் மற்றும் இந்து சம்மேளனத்தின் தலைவர் டி. அருன்காந்த உள்ளிட்டவர்கள் மேற்படி தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கடிதங்கள் மூலம் கோரியிருந்ததாக கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவர்கள், சுதந்திர தினத்தன்று ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த விடயத்தில் ஜனாதிபதி ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு பரிந்துரைப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்கவும் மேற்படி கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.