சற்று முன்னர் கல்லடி பாலத்தில் பாய்ந்து இளைஞர் தற்கொலை முயற்சி!

சற்று முன்னர் கல்லடி பாலத்தில் பாய்ந்து இளைஞர் தற்கொலை முயற்சி!

சற்று முன்னர் கல்லடி பாலத்தில் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்முனை பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியை சேர்ந்த இளைஞர் தனுஷ் 26,வயது சியபத்த பினாஷ் கல்முனை கிளையில் கடதைபுரிமவரே இத் தற் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அவருடன் இன்னும் ஒருவர் கல்லடி பாலத்தில் பாய்ந்ததாக கூறப்படுகிறது ஆனாலும் அவர் தொடர்பில் தகவல் எதுவும் வெளிவரவில்லை.

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இடத்தில் இருவரது மோட்டார் சைக்கிள்கள் பொலிசாரால் கைப்பற்றப் பட்டுள்ளது.

இத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஒருவர் தனது நண்பனிடம் தொலைபேசியில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேடும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இதனால் அப் பகுதியில் சற்று பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

பொலிஸ் விசாரனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.