தோட்ட தொழிலாளர் சம்பள அதிகரிப்பு; கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து!

தோட்ட தொழிலாளர் சம்பள அதிகரிப்பு; கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து!

தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் ரூபா 700 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான, கூட்டு ஒப்பந்தம் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் இன்று (28) நண்பகல் 12.00 மணியளவில் இதற்கான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

முதலாளிமார் சம்மேளனத்தின் சார்பில் அதன் பணிப்பாளர் நாயகம் கணிஷ்க வீரசிங்கவும், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் சார்பில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ், கூட்டு தொழிலாளர் சங்கம் சார்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானும் இக்கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம், கூட்டு தொழிலாளர் சங்கம் என்பவற்றின் பிரதிநிதிகள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடதக்தக்து.