வவுனியாவில் பதற்றம் – நாற்றமடைய போகும் வவுனியா நகரம்!

வவுனியாவில் பதற்றம் – நாற்றமடைய போகும் வவுனியா நகரம்!

.நாற்றமடைய போகும் வவுனியா நகரசபை மற்றும் பிரதேச சபைகள் குப்பைகளை கொட்டும் பகுதியான பம்பைமடு காட்டுப்பகுதியில் வீடுகளை அமைத்துள்ள இஸ்லாமியர்கள் குப்பைகளை கொட்டவிடாது வாகனங்களை மறித்தது ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வரும் நிலையில் நகரசபை மற்றும் பிரதேச சபையினர் இணைந்து மாபெரும் பணி பகிஷ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதுடன் குப்பைகள் நிறைந்த வாகனங்களை நகர்ப்பகுதியில் தரித்து நிறுத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறிப்பிட்ட பகுதி குப்பை கொட்டும் பகுதி என தெரிந்தும் அப்பகுதியில் வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக நகரபிதா மற்றும் பிரதேச சபை தலைவர் கலந்துரையாடலையும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு சிலருக்காக நகர மற்றும் பிரதேச சபையின் கீழ் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் மக்களை பாதிப்படைய வைக்க முடியாது எனவும் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்