வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் ஆர்ப்பாட்ட பேரணி

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் ஆர்ப்பாட்ட பேரணி

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் எட்டு மாவட்டங்களில் உள்ளவர்களை திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்ட பேரணி இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்கு வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதில் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், சிவில் அமைப்புக்கள், ஏனைய தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் மற்றுமின்றி சர்வதேசத்தினாலும் எந்ததொரு தீர்வும் வழங்கப்படாமல் இழுத்தடிப்பு மேற்கொள்ளும் விவகாரத்துக்கு எதிராகவே தற்போது இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.