தத்தெடுத்த பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வளர்ப்புத் தந்தை!

மனிடோபாவில் தத்தெடுத்த பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வளர்ப்புத் தந்தை!

மனிடோபாவில் நான்கு மகள்களைத் தத்தெடுத்த வளர்ப்புத் தந்தை ஒருவர், அவர்களில் இரண்டு பேரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணை இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் மற்ற இரண்டு மகள்கள் தொடர்ந்தும் அவரிடமே இருக்க அனுமதிக்கப்பட நிலையில் அவர்களுடனும் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தத்தெடுக்கப்பட்ட இளம்பெண்களை வளர்ப்புத் தந்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பொலிஸ் விசாரணை நடைபெற்ற வந்தநிலையில் பெண்பிள்ளைகள் இருவரும் அரச காப்பகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

அது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போதே அடுத்த, இரண்டு மகள்களையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து அவர் மீது பல பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

அதன்படி இடம்பெற்ற கடந்த விசாரணையின்போது, மீதமுள்ள இரண்டு மகள்களை, குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடனேயே தங்க அனுமதித்தது ஏன் என நீதிபதிகள் சிறுவர் நல அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.