நடப்பு உலகக்கிண்ண தொடர் முற்றிலும் வேறுப்பட்டது!

நடப்பு உலகக்கிண்ண தொடர் முற்றிலும் வேறுப்பட்டது!

இங்கிலாந்தில் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண தொடருடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டு உலகக்கிண்ண தொடர் முற்றிலும் வேறுப்பட்டதாக இருக்கும் என இந்திய ‘ஏ’ அணி பயிற்சியாளரும், முன்னாள் இந்திய அணியின் தலைவருமான ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் மே மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இத்தொடர் குறித்து ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறிய கருத்துக்கள் இவை,

“தற்போதைய நிலையில் இந்தியா அணி சிறப்பாக விளையாடி வருகிறது. உலகக் கிண்ணத்தை வெல்லும் அணிகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. அடுத்த சில மாதங்களில் உச்சத்தை அடைவோம் என நம்புகிறேன்.

1999ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ண தொடரை 2019ஆம் ஆண்டு தொடருடன் ஒப்பிடக்கூடாது. இங்கிலாந்தில் ஆடுகளங்கள் மிகவும் சமமாக இருக்கும். இது மிகவும் அதிக ஓட்டங்கள் குவித்த உலகக் கிண்ண தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

இந்தியா ‘ஏ’ அணி இங்கிலாந்தில் விளையாடும்போது தொடர்ச்சியாக 300 ஓட்டங்களுக்கு மேல் அடிக்கப்பட்டது. 1999ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடரை காட்டிலும் ஓட்ட பலகையில், அதிக ஓட்டங்கள்; வரும். 1999ஆல் டியூக்ஸ் பந்து பயன்படுத்தப்பட்டது.

தற்போது இரண்டு கூக்கப்புரா பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. களத்தடுப்பு கட்டுப்பாடுகள் மாறுபட்டுள்ளது. ஆகையால் இரண்டு உலகக்கிண்ண தொடரையும் தொடர்பு படுத்தி பார்க்கக்கூடாது” என கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண தொடரில், 461 ஓட்டங்கள் குவித்து ராகுல் டிராவிட், முதல் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.