அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் கைது!

அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் கைது!

அமெரிக்காவில் கடவுச் சீட்டு மோசடியில் ஈடுபட்டதாக, கைது செய்யப்பட்ட 130 பேரில், 129 பேர் இந்திய மாணவர்களென அந்நாட்டு குடிவரவு, சுங்க அமலாக்கப்பிரிவு அறிவித்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள பார்ம்ங்டன் (Farmington) பல்கலைக்கழகத்திற்கு கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, வேறு நாடுகளிலிருந்து சென்ற மாணவர்களே நேற்று (வெள்ளிக்கிழமை) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த மாணவர்கள் அனைவரும் குடிவரவு மற்றும் குடியகழ்வு சட்ட திட்டங்கள் எதனையும் கடைப்பிடிக்கவில்லை என்பது அவர்களின் கடவுச் சீட்டின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளதாக சுங்க அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த மாணவர்களை தவறாக வழிநடத்திய 8 பேரின் மீது 3 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுங்க அமலாக்கப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அந்தவகையில் கைது செய்யப்பட்ட 130 மாணவர்களையும் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக அமெரிக்க ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.