ஐரோப்பாவில் 10,000 பிள்ளைகள் காணாமல் போயுள்ளனர்!

ஐரோப்பாவில் 10,000 பிள்ளைகள் காணாமல் போயுள்ளனர்!

ஜெர்மனியில் பேர்லின் நகரில், பேர்லின் நகரபிதா திரு மைக்கல் முளர் அவர்களின் அனுசாரானையுடன், ஊடக சுதந்திரத்திற்கானஐரோப்பிய நிலையத்துடன் இணைந்து ஐரோப்பிய பல ஊடக அமைப்புக்களினால், “ஐரோப்பாவில்புலனாய்வு ஊடக செயற்பாடு”என்ற தலைப்பில், ஓர் மாகாநாடு கடந்த 31 ஜனவரி, 1 பெப்ரவரி நடைபெற்றது. இவ்மாகாநாட்டிற்கு ஐரோப்பிய ஆணையம் நிதி உதவி வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ் மாகாநாட்டில், ஐரோப்பிய நாடுகளில் ஊடாக சுதந்திரத்திற்கும், இதில் ஊடகத்துறையில் புலனாய்வு பங்கு பற்றியும், இதனால் ஐரோப்பிய ஊடகவியலாளர்களிற்கு ஏற்பட்டுள்ள கொலைகள், தீமைகள் கஸ்டங்கள், சர்ச்சைகள் துன்புறுத்தல்கள் பற்றிய ஆராயப்பட்ட அதேவேளை, ஐரோப்பவில் சிலஅரசாங்கங்கள் தவறான வழிகளிற்கு தமது நிதியை செலவிடுவது பற்றியும் ஆராயப்பட்டது.

இவ் மாகாநாட்டில் சகல ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் ஊடகவியலாளர்கள், பங்கு பற்யிருந்ததுடன், ஜெர்மன் பாரளுமன்ற உறுப்பினர், ஐரோப்பிய பாரளுமன்றஉறுப்பினர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர். இவ்மாகாநாடு ஜெர்மனியில் நடந்த பொழுதும், ஆங்கில மொழியிலேயே நடைபெற்றள்ளது.

பிரான்ஸ் தமிழர் மனிதர் உரிமை மையத்தின் பொது செயலாரும், தமிழ் ஆங்கில மொழிகளில் ஆய்வு கட்டுரைகளை எழுதிவரும் திரு ச. வி. கிருபாகரன்அவர்களும் இவ் மாகாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிருபாகரனினால் எழுதப்படும் மனித உரிமை, ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச அரசியல் பற்றிய ஆங்கில ஆய்வு ஆராய்ச்சி கட்டுரைகள், ஆருடங்கள் ஐரோப்பியஊடகங்களில் வெளிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா ஜனதிபதி ரம் பற்றி, கிருபாகரனினால் எழுதப்பட்ட “விசாரணைகள்தொடரலாம், ஆனால் ஜனதிபதி ரம் பதவியிலிருப்பார்”என்ற ஆய்வு கட்டுரை,மேற்கு நாட்டவர்களிடையே மிகவும் வரவேற்ப்பை பெற்ற கட்டுரையாகும்.

இவ் மாகாநாட்டில் ஓர் புலனாய்வு ஊடகவியலாளாரின் கருத்திற்கமைய, ஐரோப்பாவில் பத்தாயிரம் (10,000) பிள்ளைகள் வரை காணமாயுள்ளதாகவும், இதுபற்றிதாம் தொடர்ந்து புலனாய்வு செய்து வருவதாகவும், இவற்றை முன்னின்று வழி நடத்துபவர்கள் சிலரை தாம் ஏற்கனவே இனம் கண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.