பீகார்- சீமாஞ்சல் விரைவு ரயில் விபத்து: 6 பேர் பலி!

பீகார்- சீமாஞ்சல் விரைவு ரயில் விபத்து: 6 பேர் பலி!

பீகார் மாநிலத்தில் சீமாஞ்சல் விரைவு ரயிலின் 9 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 24க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பீகாரின் வைஷாலி பகுதியில் வந்து கொண்டிருந்த சீமாஞ்சல் விரைவு ரயிலின் 9 பெட்டிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை திடீரென தடம் புரண்டுள்ளது.

இதன்போது ரயில் பெட்டிகளில் சிக்கிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட பொலிஸ் அதிகாரிகளின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

விபத்தில் சிக்கியுள்ள ஏனையோரை மீட்கும் நடவடிக்கையில் மீட்பு குழுவினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகையால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடுமென அஞ்சப்படுகின்றது.