வட இந்தியாவில் 5.6 ரிக்டர் நிலநடுக்கம்.

வட இந்தியாவில் 5.6 ரிக்டர் நிலநடுக்கம்.

வட இந்தியாவின் சில பகுதிகளில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுமார் 40 விநாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கம் 5.6 ரிக்டர் அளவுகோளில் பதிவாகியுள்ளது.

இந்திய தலைநகர் புதுடெல்லி மற்றும் வடக்கு மாநிலமான ஜம்மு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும், ஸ்ரீநகரிலிருந்து 118 கி.மீ தொலைவில் வடமேற்கு திசையில் இந்நிலநடுக்கம் நிலைக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.