ராகுல் காந்தி பிரதமராக பதவியேற்க வேண்டும்!

ராகுல் காந்தி பிரதமராக பதவியேற்க வேண்டும்!

நாட்டின் அடுத்த பிரதமராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவியேற்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என பிரபல ஹிந்தி நடிகையான ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.

அரசியலில் ஈடுபாடு கொண்டு நடிகை ஷில்பா ஷெட்டி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் முன்னிலையில் ஷில்பா ஷெட்டி கட்சியில் இணைந்துக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்,

“நாட்டை பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி செய்துள்ளது.

இதனால் அக்கட்சியில் சேர முடிவெடுத்தேன். தற்போது நாட்டுக்கு மாற்றம் தேவைப்படுகின்றது.

அந்த மாற்றத்தை காங்கிரஸால் கட்சியினாலேயே கொண்டு வர முடியும். நாட்டின் அடுத்த பிரதமராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவியேற்க வேண்டும் என்பதே எனது விருப்பம்” எனக் கூறினார்.