இயக்குனருடைய காலைத் தொட்டுக் கும்பிட வேண்டும்.

96 படத்தின் இயக்குனருடைய காலைத் தொட்டுக் கும்பிட வேண்டும் என நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ’96’ படத்தின் 100 நாள் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யமுனை ஆற்றிலே’ பாடலோட ஒரிஜினல் பதிப்பைவிட இந்தப் படத்தில் அந்த பாட்டு எப்போ வரும் என்றுதான் காத்துக் கொண்டு இருந்தேன்.

அந்த காட்சியைப் பார்த்த பின்னர் இயக்குனருடைய காலைத் தொட்டு கும்பிட வேண்டும் என நினைத்தேன்.

அந்தளவிற்கு மிகவும் அழகாக படத்தைச் செதுக்கியிருக்கின்றார்கள். காதலிப்பதற்க்கு காதலியோ, காதலனோ தேவையில்லை. காதல் மட்டுமே போதும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான படம் ’96’ திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் விஜய் சேதுபதி, திரிஷா, பிரேம் குமார் உட்பட ’96’ படத்தின் பிரபலங்கள் பங்கு பெற்றனர்.

அவர்களுடன் திருமுருகன் காந்தி, சமுத்திரக்கனி, சேரன், பார்த்திபன், லெனின் பாரதி, பி.எஸ்.மித்ரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.