32 பவுண்டஸ் எடை கொண்ட முட்டைகோசை வளர்த்த சிறுமி!

32 பவுண்டஸ் எடை கொண்ட முட்டைகோசை வளர்த்து அமெரிக்க சிறுமி சாதனை!

அமெரிக்காவில் உள்ள 9 வயது சிறுமியொருவர், 32 பவுண்டஸ் எடை கொண்ட முட்டைகோசை வளர்த்து சாதனைப்படைத்துள்ளார்.

பென்சில்வேனியா மாகாணத்தில் நடைபெற்ற தேசிய அளவில் நடைபெற்ற முட்டைகோஸ் வளர்க்கும் போட்டியொன்றில், கலந்துக் கொண்ட லில்லி ரைஸ் என்ற குறித்த சிறுமியே, இவ்வாறு சாதனைப்படைத்துள்ளார்.

குறித்தப் போட்டியில் மொத்தம் 32,000 சிறுவர்கள் பங்கேற்றனர். அதில் முதலிடம் பிடித்த லில்லி ரைஸிற்கு, 1000 அமெரிக்க டொலர்கள் பணப்பரிசும் கிடைத்தது.

இப்போட்டியில் முதலிடம் கிடைத்தது குறித்து லில்லி ரைஸ் கூறுகையில்,

“இந்த முட்டைகோஸ் பாரிய அயவில் வளர எதுவும் சிறப்பாக செய்யவில்லை. அத்தோடு இத்தாவரத்திற்கு எந்தவிதமான உரமும் போடவில்லை. இது தனக்கும் தாயாருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது” என கூறியுள்ளார்.

9 வயதான லில்லி ரைஸ், பிட்ஸ்பர்க்கில் உள்ள பீபில்ஸ் முதன்மை பாடசாலையில் நான்காம் தரத்தில் கல்வி பயின்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.