தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்குள் மீண்டும் பதற்றம்!

தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் கடமையாற்றும் விற்பனை முகாமையாளரை உடனடியாக பதவி நீக்குமாறு கோரி, ஊழியர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதால், அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை விற்பனை முகாமையாளரிடம் அறவிட வேண்டும் எனவும் கோரியுள்ள ஊழியர்கள், ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவரது அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து, மகிந்தவின் ஆதரவாளர்கள் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை கைப்பற்றியதால், பதற்றமான நிலைமை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.