இலங்கையில் அமுலுக்கு வரும் தூக்குத் தண்டனை!

இலங்கையில் அமுலுக்கு வரும் தூக்குத் தண்டனை!

போதைப்பொருள் குற்றங்களுக்கான மரண தண்டனை இன்னும் ஓரிரு மாதங்களில் அமுலுக்கு வரும், யார் என்ன சொன்னாலும் அந்த முடிவில் மாற்றமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மரண தண்டனை விதிக்கும் செயற்பாடுகளில் மனித உரிமைகள் ஆணைக்குழு தலையிடக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.