கடத்தி வரப்பட்ட சிறுத்தைக் குட்டியை தாய்லாந்திற்கு அனுப்ப முடிவு!

கடத்தி வரப்பட்ட சிறுத்தைக் குட்டியை தாய்லாந்திற்கு அனுப்ப முடிவு!

சென்னைக்கு கடத்தி வரப்பட்ட சிறுத்தை குட்டி மீண்டும் தாய்லாந்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படவுள்ளது.

விரைவில் சிறுத்தை குட்டி அனுப்பும் திகதி உள்ளிட்ட விபரங்கள் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2ஆம் திகதி விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட சிறுத்தைக்குட்டியை விமான நிலைய அதிகாரிகள் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பறிமுதல் செய்துள்ளனர்.

தாய்லாந்தில் இருந்து சென்னை வரும் பயணி ஒருவரிடம் சிறுத்தைக் குட்டி இருப்பதாக விமான அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்தே அந்த சிறுத்தைக் குட்டியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அதன்பின்னர் சிறுத்தை குட்டி வண்டலூர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது.

பிறந்து 1½ மாதங்களான சிறுத்தை குட்டியை பூங்கா ஊழியர்கள் கண்காணித்து பராமரித்து வருகின்றார்கள்.

மீட்கப்பட்ட சிறுத்தைக்குட்டியை மீண்டும் தாய்லாந்திற்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்த விசாரணைகளின் போது, சிறுத்தைக்குட்டியுடன் தாய்லாந்து பிரஜையை மீண்டும் அந்நாட்டுக்கே திருப்பி அனுப்பும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.