பூமி தமது வெளிர் நீல நிறத்தை இழக்கக் கூடும்!

80 ஆண்டுகளில் பூமி தமது வெளிர் நீல நிறத்தை இழக்கக் கூடும் என அமெரிக்காவின் MIT ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

துருவப்பகுதி அருகே பசுமை நிறத்திலும், பிற இடங்களில் வெளிர் நீல நிறுத்திலும் கடல் காட்சியளிப்பதால் விண்வெளியில் இருந்து பார்க்கும்போது பூமியின் தோற்றம் தற்போது நீல நிறத்தில் உள்ளது.

இதில் கடல் வாழ் நுண்ணுயிரான பைடோப்லாங்டன் முக்கியப் பங்கு வகிக்கிறது.

புவி வெப்ப மயமாதலின் காரணமாக இதன் தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டு வருவதாக அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் தொழிற்கல்வி நிறுவன ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

21-ஆம் நூற்றாண்டு இறுதியில் 3 டிகிரி செல்சியஸ் வரை புவி வெப்பம் அதிகரிக்கக் கூடும் என்பதால், கடலில் அடர் நிறம் பரவியது போன்ற தோற்றம் ஏற்பட்டு அது புவியின் வெளிப்புறத் தோற்றத்திலும் மாற்றம் ஏற்படும் என கணித்துள்ளனர்.