கிளிநொச்சி பொது சந்தையில் எட்டு கடைகள் உடைக்கப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு!

கிளிநொச்சி பொது சந்தையில் எட்டு கடைகள் உடைக்கப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு!

கிளிநொச்சி பொது சந்தையில் எட்டு கடைகள் உடைக்கப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்ற இரவு இடம்பெற்றள்ளது. குறித்த பகுதியில் தமது வர்த்தக நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய பின்னர் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பொது சந்தையில் உள்ள தற்காலிக கடைகளில் வியாபாரம் மேற்கொள்ளும் பகுதியிலிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.