அ.தி.மு.க- தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது!

அ.தி.மு.க- தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது!

நடைபெறவுள்ள தேர்தலில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாதென மக்கள் நீதி மய்யத்தின் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“நான் அரசியல் பயணத்தை ஆரம்பித்த முதல் அ.தி.மு.க.வுக்கு எதிராக குரல்கொடுத்து வருகின்றேன்.

ஆகையால் அவர்களுடன் இணையும் விருப்பம் எனக்கில்லை. தி.மு.க.வுடனும் இணைந்து செயற்படமாட்டேன்.

மேலும், மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளமையால், யாருடன் கைகோர்க்க வேண்டுமென்பதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

ஆகையால் அழுக்கு படிந்துள்ள கைகளுடன் கை குலுக்கினால் எமது புனிதமான மக்கள் சேவையிலும் அழுக்குப்படிந்து விடும். இதனால் கூட்டணி தொடர்பில் இன்னும் சிந்திக்க வேண்டியுள்ளது” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.