அலுகோசு பதவிக்கு விண்ணப்பம்! – சிறைச்சாலைகள் திணைக்களம்

அலுகோசு பதவிக்கு விண்ணப்பம்! – சிறைச்சாலைகள் திணைக்களம்

அலுகோசு பதவிக்காக எதிர்வரும் திங்கட்கிழமை முதல் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. சிறைச்சாலைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதியினால் எடுக்கப்படவுள்ள நடவடிக்கையை இலகுபடுத்தும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 25ஆம் திகதி அலுகோசு பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாகவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.