படிப்பறிவு அற்றவர்களா நாடாளுமன்ற உறுப்பினர்கள்?

படிப்பறிவு அற்றவர்களா நாடாளுமன்ற உறுப்பினர்கள்?

நாடாளுமன்ற மின் தூக்கியில் 12 உறுப்பினர்கள் சுமார் 20 நிமிடங்கள் சிக்கிக்கொண்ட சம்பவமொன்று பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது

குறிப்பாக நாடாளுமன்ற மின் தூக்கியில் ஏறக்கூடிய நபர்களின் எண்ணிக்கை 6 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதுவும் பார்வையாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு மிக தெளிவாக தெரியக்கூடிய வகையில் மூன்று மொழியிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் நேற்று அதன் ஊடக சுமார் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயணித்துள்ளனர்.

இதன் காரணமாக சுமார் 20 நிமிடங்கள் அதற்குள் சிக்கியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசர குழு உதவியுடன் மீட்கப்பட்டனர்.

இதன் பின்னர் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலும் குறித்த உறுப்பினர்கள் இதனை பெரும் பூதாகரமான விடயமாக சுட்டிக்காட்டியிருந்தார்கள்.

குறித்த மின் தூக்கி சுமார் 35 வருடங்கள் பழைமையானது என்பது ஒருபுறம் இருக்க, அதில் செல்லும் நபர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதும் அதனை மீறி சென்றுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த விடயம் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விமர்சனப் பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக நாடாளுமன்றிற்கு செல்பவர்கள் படிப்பறிவு அற்றவர்களா என்ற கேள்விகளும் சமூக வலைத்தளங்கள் ஊடாக எழுப்பப்படுகின்றன.