சட்டவிரோத மதுபானம் நிலையம் சுற்றிவளைப்பு : சந்தேக நபர் கைது!

சட்டவிரோத மதுபானம் நிலையம் சுற்றிவளைப்பு : சந்தேக நபர் கைது!

கந்தானை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் (கசிப்பு) உற்பத்தி நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டு 5 இலட்சத்து 73 ஆயிரத்து 750 மில்லி லீற்றர் மதுபானம் கசிப்பும், மதுபான வடித்தலுக்காக பயன்படுத்தும் 32 இலட்சத்து 4 ஆயிரத்து 600 மில்லி லீற்றர் கோடாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரொருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 6.30 மணியளவில் கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உஷ்வத்தைப் பகுதியில் கந்தானை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே இந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தொடுபல உஷ்வத்தைப் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிசார் சந்தேக நபரை இன்று மீகமுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.