சட்டவிரோத மதுபானம் அருந்தியதில் 28 பேர் பலி!

சட்டவிரோத மதுபானம் அருந்தியதில் 28 பேர் பலி!

உத்தரகாண்டின் ஹரித்துவார் மாவட்டம் ரூர்கி பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், பலர் கவலைக்கிடமாக நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சட்ட விரோதமாக நடக்கும் இந்த விற்பனைக்கு உள்ளூர் அதிகாரிகளும் உடந்தையாக இருந்தது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக 13 அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த விடயமானது உத்தரகாண்டில் தற்போது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.