சென்னையில் மஹிந்தவிற்க்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

இலங்கையின் எதிர்கட்சி தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவிற்க்கு எதிராக சென்னையில் போராட்டம் ஒன்று தற்போது நடை பெறுகிறது.

த இந்து பத்திரிகை நட்டாத்தும் கருத்தரங்கு ஒன்றிற்கு மஹிந்த ராஜபக்ச பேச்சாளராக அழைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழின இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை அழைத்து கருத்தரங்கு நடத்துவதற்கு எதிர்ப்பு வெளியிட்டே இப்போராட்டம் நடத்தப்படுகிறது.

இப் போராட்டத்தை மே பதினேழு இயக்கம் தற்போது சென்னையில் நடத்தி வருகிறது.

இணைப்பு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் அனைவரும் கைது!

தி இந்து பத்திரிக்கை பெங்களூரில் நடைபெறும் தனது கருத்தரங்கிற்கு இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை அழைத்திருப்பதைக் கண்டித்து மே பதினேழு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இன்று காலை பெங்களூர் ஃப்ரீடம் பார்க் அருகில் ஆர்ப்பாட்டம் துவங்கியது. தமிழர் விரோத தி இந்து பத்திரிக்கையைக் கண்டித்தும், ராஜபக்சேவைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னரே அனுமதி பெற்றிருந்த போதும், பெங்களூர் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தோழர்கள் தற்போது மைசூர் சாலையில் உள்ள Police Armed Forces Head quarters-ல் வைக்கப்படுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே பதினேழு இயக்கம் மற்றும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் பங்கேற்றனர்.