பொலிஸ் திணைக்களம் மாற்றியமைக்கப்படும்!

பொலிஸ் திணைக்களம் மாற்றியமைக்கப்படும்!

அடுத்த சில மாதங்களில் பொலிஸ் திணைக்களம் மாற்றியமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் நலனுக்காகவே பொலிஸ் திணைக்களத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தத்தமது பொலிஸ் பிரிவினுள் சட்டவிரோத மதுபானங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அது தொடர்பாக குறித்த பிரதேசத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் குறித்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆகியோர் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான சுற்றறிக்கை அடுத்த வாரமளவில் வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.