நாளை முன்னேஸ்வரம் கொடியேற்றம்.

நாளை முன்னேஸ்வரம் கொடியேற்றம்.

சிலாபம், முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதஸ்சுவாமி ஆலயத்தின் வருடாந்த பிரம்மோற்சவம் நாளை ஆரம்பமாகவுள்ளது.

பஞ்ச ஈஸ்வரங்களில் முதன்மை பெற்று விளங்கும் இக்கோயிலின் கொடியேற்றம் நாளை காலை 9.00 மணிக்கு சிறப்பு பூசையுடன் ஆரம்பமாகவுள்ளது.

ஆரம்பமாகும் உற்சவங்கள் தொடர்ந்து 10 நாட்களுக்கு இடம்பெறவுள்ளவுள்ளன.

இதில் 17 ஆம் திகதி வேட்டைத் திருவிழாவும் 18 ஆம் திகதி தேர்த் திருவிழாவும் மற்றும் 19 ஆம் திகதி தீர்த்த உற்சவமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.