நெல்உலர விடுவதற்கான தளங்கள் போதியளவு இன்மையால் வீதிகளில் உலர விடவேண்டிய நிலை!

மருதங்குளம் புத்துவெட்டுவான் ஆகிய பகுதிகளில் நெல்உலர விடுவதற்கான தளங்கள் போதியளவு இன்மையால் வீதிகளில் நெல்லை உலர விடவேண்டிய நிலை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மருதங்குளம் புத்துவெட்டுவான் ஆகிய பகுதிகளில் நெல்உலர விடுவதற்கான தளங்கள் போதியளவு இன்மையால் வீதிகளில் நெல்லை உலர விடவேண்டிய நிலை காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள புத்துவெட்டுவான் ஐயன்கன்குளம் மருதங்குளம் போன்ற பகுதிகளில் போதியளவு நெல் உலர விடும் தளங்கள் இல்லாத நிலையில் காணப்படுகின்றன.

குறிப்பாக, புத்துவெட்டுவான் கிராமத்தில் ஒரு நெல் உலரவிடும் தளமும் ஐயன்கன்குளம் கிராமத்தில் ஒரு நெல் உலர விடும் தளமும் காணப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பிரதேசங்களில் காலபோகத்திலும் சிறுபோகத்திலும் சகல விவசாயிகளுக்கும் ஒரே நேரத்தில் அறுவடைகள் ஆரம்பிக்கப்படுவதனால் அறுவடை செய்யும் நெல்லை உடனடியாக உலர வைக்க முடியாத நிலை ஏற்படுகின்றது என்றும் தமது கிராமங்கள் விவசாயக்கிராமங்களாக இருப்பதனால் தற்போது இருக்கின்ற நெல் உலர விடும் தளங்களைவிட மேலதிகமாகவும் தளங்கள் தேவைப்படுகின்றன.

தற்போது அறுவடை செய்யும்நெல்லை வீதிகளில் வைத்து பெரும் சிரமங்களின் மத்தியில் உலர விடுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.