13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு!

13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, காத்தான்குடி மத்திய கல்லூரியின் 89 ஆவது வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி (வெள்ளிக்கிழமை) மாலை பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

“கிழக்கு மாகாணத்தை கல்வியிலும் சுகாதாரத் துறையிலும் அவற்றை முன்னேற்றுவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு எனக்கு பணிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நான் பல தீர்மானங்களை எடுத்துள்ளேன். அந்தவகையில், ஒவ்வொரு பாடசாலை அதிபர்களுக்கும் அதிகாரங்களை வழங்கி, பிரதேச கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரங்களை வழங்கி ஒவ்வொரு பிரதேசத்தினுடைய கல்வித் திட்டங்களை அவர்ளுக்கு நாம் ஒப்படைக்கவுள்ளோம்.

இவ்வாறு கிழக்கு மாகாணத்தினுடைய ஒவ்வொரு பிரச்சினையையும் அடையாளங்கண்டு அந்தப் பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பதிலும் முழுமையா கவனத்தை நாம் செலுத்துகின்றோம்” என்று அவர் தெரிவித்தார்.