ஏ-வீதியில் விபத்து! -குடும்பஸ்தர் பலி!

யாழ்ப்பாணம் – கண்டி ஏ-9 பிரதான வீதிய புளியங்குளப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தில் புளியங்குளம் பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இருந்து யாழ் நோக்கி சென்ற ஹயஸ் வாகனம் புளியங்குளம் முத்துமாரி நகருக்கு அண்மையில் சென்று கொண்டிருந்த போது வீதியால் திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதியதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்திருந்த நிலையில் உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்ட போதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்ககப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.