சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற 21 வயது இளைஞர் மாயம்!

கித்துல்கல – களுகொவ்தென்ன பிரதேசத்தில் களனி கங்கையில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்கல்ல பகுதியிலிருந்து 18 பேர் கொண்ட நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் குறித்த இளைஞர் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்றுள்ளார்.

இதன்போது, வழியில் கித்துல்கல பகுதியில் நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் அந்த இளைஞர் சுழியொன்றில் அகப்பட்டு நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்.

சுவாரபுர – பிலியந்தல பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய கவிந்து நிலுபுல் குமார என்பவரே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல்போன இளைஞதரை கித்துல்கல பொலிஸ் பாதுகாப்பு பிரிவினர், கடற்படை மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.