ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றத்தை நாடும் ஐ.தே.க!

ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றத்தை நாடும் ஐ.தே.க!

தேசிய அரசாங்கத்தை உருவாக்கி அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பவில்லையென்றால் ஐ.தே.க உச்ச நீதிமன்றத்துக்கு செல்ல தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் வெளியாகும் சிங்கள வார பத்திரிக்கையொன்றே மேற்கண்டவாறு செய்தி வெளியிட்டுள்ளது.

தேசிய அரசாங்கம் அமைக்கும் விடயத்தில் ஜனாதிபதி எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்வதன் ஊடாக அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஐ.தே.க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அப்பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தவகையில் ஒரு தேசிய அரசாங்கத்தை அமைத்தபின், 48 அமைச்சர்கள் நியமிக்கப்படலாமெனவும் ஆனால் ஜனாதிபதியின் அமைச்சர்களின் எண்ணிக்கையை உயர்த்தத் தயாராக இல்லை எனவும் அப்பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.