கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய்!

கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய்!

வவுனியாவில் கேரளா கஞ்சாவை தம்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் இன்று அதிகாலை 01.30 மணியளவில் குறித்த இராணுவச் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தை நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் வைத்து பொலிஸார் சோதனையிட்டபோதே குறித்த இராணுவச் சிப்பாய் கைத செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, 200 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.