ஹட்டன் – கொழும்பு வீதியில் பயணித்த வான் விபத்து!

ஹட்டன் – கொழும்பு வீதியின், ஸ்டெடன் பகுதியில் பயணித்த வான் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வானில் பெண் ஒருவர் உட்பட மூவர் பயணித்துள்ள நிலையில், விபத்தில் வான் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

அதிக வேகமாக வந்த வானின் வலது பக்க சில்லு திடீரென கழன்றுள்ள நிலையிலே விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.