225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் திருடர்கள்!

225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் திருடர்கள்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் திருடர்கள் என மக்கள் கூறுவது உண்மையே என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நல்ல காலமாக இருக்கும் எனவும் 5 ஆயிரம் லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு கட்சி தாவ சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் வறுமையில் வாழும் அம்மாமார், தந்தைமார், பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று புள்ளடி இடுகின்றனர்.

நாங்கள் நாடாளுமன்றத்திற்கு செல்கிறோம். அங்கு சென்று சம்பாதித்து கொள்வோம். இது தான் நாட்டில் நடந்துள்ளது.

தேசிய அரசாங்கம் பற்றி பேசினால், உத்தியோகபூர்வமற்ற வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு இணங்கலாம் எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.