வடக்கு நோக்கி செல்லும் ரயில் சேவைகள் பாதிப்பு!

வடக்கு நோக்கி செல்லும் ரயில் சேவைகள் பாதிப்பு!

வடக்கு நோக்கி செல்லும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தம்புத்தேகம மற்றும் சேனாரத்கம பகுதியில் ரயில் ஒன்று, இன்று (ஞாயிற்றுக்கிழமை) தடம் புரண்டமை காரணமாகவே இச் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சீர்செய்யும் பணிகள் துரிதகதியில் இடம்பெற்றுவருவதாகவும் விரைவில் அப்பகுதியூடான போக்குவரத்துக்கள் மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.