துப்பாக்கிச் சூடு : கொலை குற்றச்சாட்டின் முக்கிய சந்தேகநபர் பலி!

தனமல்வில பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் கொலை குற்றச்சாட்டின் முக்கிய சந்தேகநபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 42 வயதுடைய என்றும் காயமடைந்தவர் 22 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சென்ற நான்கு அடையாளம் தெரியாத நபர்களால் குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.