இணையத்தினூடாக மதுபான அனுமதி!

இணையத்தினூடாக மதுபான அனுமதி!

உள்ளூர் மற்றும் வெளியூர் மதுபான விற்பனைக்கான அனுமதிகள் இனிமேல் இணையத்தின் மூலம் வழங்கப்படவுள்ளன.

மதுவரித்திணைக்களம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன்படி புதிய விற்பனை அனுமதிகள் மற்றும் மீள்பதிவுகள் என்பவற்றை இணையத்தின் மூலம் செய்துக்கொள்ளமுடியும்.

அத்துடன் நிகழ்ச்சி ஒன்றுக்காக ஒருவர் 7.5 லீற்றர் மதுபானத்தை கையிருப்பில் வைத்திருக்கமுடியும்.

தற்போது இலங்கையில 5000 மதுபான விற்பனை நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் அனுமதியின்றி 5000 நிலையங்களில் மதுபானம் விற்பனையாகின்றன.

இந்த நிலையில் அதிகரித்துவரும் மதுபானத்துக்கான கேள்வியைக்கொண்டே இணைய அனுமதிகள் வழங்கப்படவுள்ளன.