நாட்டில் 48 மணிநேரங்களுக்குள் 15 பேர் உயிரிழப்பு!

நாட்டில் 48 மணிநேரங்களுக்குள் 15 பேர் உயிரிழப்பு!

நாட்டின் சில பகுதிகளில் 48 மணிநேரங்களுக்குள் இடம்பெற்ற விபத்துக்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

மதவாச்சி, புத்தளம், சிலாபம், முவத்தகம, வெலிகந்தை, அம்பாந்தோட்டை, பம்பலப்பிட்டி மற்றும் வத்தளைப் பகுதிகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வாகன விபத்துகளில் மூன்று சிறுவர்கள் மற்றும் நான்கு பெண்கள் உட்பட 11 பேரும், ரயில் விபத்துகளில் ஒரு இளம் பெண் உட்பட 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, விபத்து தொடர்பான விசாரணைகளை அந்தந்தப் பகுதிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.