மோசடிகள் தொடர்பாக எவரையும் பாதுகாக்கவேண்டிய அவசியம் இல்லை!

மோசடிகள் தொடர்பாக எவரையும் பாதுகாக்கவேண்டிய அவசியம் இல்லை!

சுங்கத்துறையில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் தொடர்பாக எவரையும் பாதுகாக்கவேண்டிய அவசியம் தமக்கு கிடையாதென நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க சுங்கத்துறையில் இடம்பெறும் சகலவிதமான ஊழல் மோசடிகள் தொடர்பில் முழு நாட்டுக்கும் தகவல்களை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை அங்குள்ள பிரதானிக்கும் தொழிற்சங்கங்களுக்கும் வழங்குவதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் அவர்கள் இந்த விசாரணையில் மிக உயர்ந்த பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ள பி.எம்.டபிள்யூ சொகுசு வாகனம் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டமை மற்றும் கொட்டைப் பாக்கு மற்றும் மிளகு ஏற்றுமதியின் போது இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பிலும் விசாரணைகளை கொள்ளப்படும் என அவர் கூறினார்.

அது தொடர்பான அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் அரசாங்கத்துக்கு சமர்ப்பிக்கும் பொறுப்பை சுங்கப் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம். சார்ள்ஸிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

மேலும் நாட்டிற்கு சுங்கத்தினால் வருமானத்தை அதிகரிப்பதே தமது நோக்கம் என்றும் அவ்வாறு செய்ய, சுங்க சட்டத்தில் திருத்தங்களையும் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப பொருத்தமான மாற்றங்களும் செய்யப்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.