கோட்டாவின் ஆட்சேபனை மனு நிராகரிப்பு!

கோட்டாவின் ஆட்சேபனை மனு நிராகரிப்பு!

அருங்காட்சியம் தொடர்பான வழக்கினை மூவரடங்கிய நீதாய மேல் நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவை நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அத்தோடு மெதமுலனயில் டீ.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதற்கு அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பான விசாரணைகள், தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என நீதாய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்காலை – வீரகெட்டிய – மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு அருங்காட்சிய நிர்மாண பணியின் போது 33 மில்லியன் ரூபாய் முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டுள்ளமை உள்ளிட்ட பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் 7 குற்றப்பத்திரங்களை சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ளார்.

இதனை அடுத்து டீ.ஏ. ராஜபக்‌ஷ அருங்காட்சியக வழக்கை விசாரிக்க, மூவரடங்கிய நீதாய மேல் நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லை என கோட்டபாய ராஜபக்ஷ மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், கோட்டபாய ராஜபக்ஷவின் மனுவை நிராகரிப்பதாக நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.