பகிடிவதை கொடுமையால் மாணவி தூக்கிட்டு தற்கொலை!

பகிடிவதை கொடுமையால் மாணவி தூக்கிட்டு தற்கொலை!

சக மாணவிகளின் பகிடிவதை கொடுமையால், மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சிப்பிப்பாறை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாலி பழனிவேலின் மகள் திவ்யா.

இவர் கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். திவ்யா சிலம்பம் கலையில் தேர்ச்சி பெற்று பல்வேறு பதக்கங்களை பெற்றிருகிறார்.

இந்நிலையில் கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு திரும்பிய திவ்யா, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய திவ்யாவின் தாயார், தனது மகன் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிச்சியடைந்தார்.

பின்னர் அருகிலிருந்தவர்களின் உதவியுடன், திவ்யாவின் உடலை கீழே இறக்கினார். திவ்யாவின் உடலை பார்த்து அவரது குடும்பத்தார் கதறியது அங்கிருந்தவர்களை கலங்க வைத்தது.

மாணவியின் தற்கொலைக்கு காரணம் கல்லூரியில் படிக்கும் சக மாணவிகளின் பகிடிவதைஎன தெரியவந்துள்ளது.

இதனால் கொந்தளித்த மாணவியின் உறவினர்களும், பொதுமக்களும், திவ்யாவின் மரணத்திற்கு காரணமாக மாணவிகளை கைது செய்து கொடூர தண்டனை வழங்க வேண்டும் என பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

பகிடிவதை காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.