மேற்கு லண்டனில் விபத்து: இருவர் பலி!

மேற்கு லண்டனில் விபத்து: இருவர் பலி!

மேற்கு லண்டனில் காரொன்று சொகுசு பேருந்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மிக நீண்ட நேரமாக பொலிஸாரினால் பின்தொடரப்பட்டு வந்த காரே இவ்வாறு தவறான திசையில் பயணித்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நேர்ந்த இவ்விபத்தில் ஆணொருவரும், பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர்.

கொள்ளை சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவலுக்கமைய குறித்த காரை பொலிஸார் ஹரோ பகுதியிலிருந்து சுமார் 7 கிலோமீற்றர் தூரத்திற்கு பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

ஆனால், கார் தவறான திசையில் பயணித்ததை தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகள் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்தே இவ்விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.