காளை பந்தயத்துடன் அறுவடை காலத்தின் நிறைவை கொண்டாடும் இந்திய மாநிலம்.

காளை பந்தயத்துடன் அறுவடை காலத்தின் நிறைவை கொண்டாடும் இந்திய மாநிலம்.

வருடாந்த ஜல்லிக்கட்டு அல்லது ஏறுதழுவுதல் போன்ற வீரதீர போட்டிகளைப் போன்று தென்னிந்திய மங்களூரில் வருடாந்த கம்பாலா எனப்படும் எருமை மாடுகளை பிடித்துக்கொண்டு ஓடும் பந்தயம் இடம்பெற்று வருகின்றது.

இந்த வருடத்தின் அறுவடைக் காலம் மிக லாபகரமாக இடம்பெற்றதை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வுகளை தொடர்ந்து இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.

சேறு நிறைந்த பாதையில் எருமை மாடுகளை எந்தளவிற்கு கட்டுப்படுத்தி எவ்வளவு வேகமாக அவற்றுக்கு ஈடுகொடுத்து ஓட முடியும் என்பதை நிர்ணயிக்கும் வகையில் இந்த போட்டி இடம்பெறுகின்றது.

இந்த நிகழ்வை பார்வையிட வந்திருந்த அமெரிக்கரான யூசெப் என்பவர் கூறுகையில், “இது வாழ்க்கையோடு இணைந்த போட்டி, கொண்டாட்டம்.

மிகவும் உத்வேகத்துடன், சுறுசுறுப்பாக இடம்பெறும் கொண்டாட்டமாக இது இருகின்றது. இவ்வாறான ஒரு அழகான, பலம்பொருந்திய போட்டியை நான் இதுவரை காணவில்லை.

மனிதனுக்கும், விலங்குகளுக்கும் இடையிலான ஒற்றுமை மற்றும் மனிதநேயத்தையும் எடுத்துக் காட்டுகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த போட்டிகளின் போது 18 கம்பாலாக்கல் ஒரு சுற்றில் இடம்பெறுகின்றது. பல்வேறுபட்ட கிராமங்களில் கடந்த நவம்பர் மாதம் ஆரம்பமாகிய அறுவடைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை மாறுபட்ட திகதிகளில் இடம்பெறுகின்றன.

கம்பாலா எனப்படும் கிராமிய விளையாட்டுப் போட்டி கடந்த முன்று வருடங்களாக தடை செய்யப்பட்டிருந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு தடை நீக்கப்பட்டது.